அதிமுக குறித்து யாராவது பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தால் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுபவர் அமைச்சர் ஜெயக்குமார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகம் கருத்துகளை தெரிவிக்காமல் இருந்து வந்த அமைச்சர் ஜெயக்குமார் தற்போது மு.க.ஸ்டாலினின் கண்டன அறிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக பேசியுள்ளார்.
தமிழக அரசின் அலட்சிய போக்கால் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “திமுக தலைவர் தனது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எழுதி தருவதை பேசுகிறார். “ஒண்றினைவோம் வா” திட்டம் கூட பிரசாந்த் கிஷோரின் ஏற்பாடுதான். அரசு ஜெட்வேகத்தில் செயல்படுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.