எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

செவ்வாய், 7 ஜூன் 2022 (16:24 IST)
அரசு பள்ளிகள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் நிறுத்துப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த வகுப்புகள் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்