கெட்டுப்போனால் தான் அதற்கு பெயர் பால்: அமைச்சர், ஆரோக்கியா மோதல்

வெள்ளி, 26 மே 2017 (04:25 IST)
தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதாக நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகார் ஒன்றை கூறினார். மேலும்  பொதுமக்கள் குடிக்கும் பாலில் யாராவது கலப்படம் செய்வது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.



 


அமைச்சரின் எச்சரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த ஆரோக்கியா பால் நிறுவனம் எங்கள் பாலில் எந்தவித ரசாயனமும் இல்லை என்று பதிலளித்தது. மேலும் தங்கள் நிறுவன பால் இதுவரை கெட்டு போனதாக எந்த புகாரும் வரவில்லை என்றும் விளக்கமளித்தது.

இதற்கு மீண்டும் பதில் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'கெட்டுப்போனால்தான் அதற்கு பெயர் பால், இல்லையென்றால் அதில் ரசாயனம் கலந்துள்ளது என்பது தான் பொருள் என்று கூறியதோடு, தனியார் பால் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், ரசாயனம் கலந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் எச்சரித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்