பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்… கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:15 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் உற்பத்தியாளர்களின் பாலை தீபாவளி அன்று கூட்டுறவு சங்கங்கள் ஏற்க மறுத்ததால் கிணற்றில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகராகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் வருமானமே பாலை அடிப்படையாக வைத்துதான் இயங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கூட்டுறவு சங்கத்தில் பாலை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள் பாலை கிணற்றில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்