எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகள் அகற்றம் - வாணியம்பாடியில் பரபரப்பு

வியாழன், 2 மார்ச் 2017 (08:47 IST)
அனுமதியின்றி சாலையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் அகற்றப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 24ம் தேதி ஜெ.வின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதற்காக, வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் கூட்டுரோட்டில் தீபா பேரவை சார்பாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை போலீசார் அனுமதியின்றி வைத்தனர். மேலும், அன்றைய தினத்தில் அந்த சிலைத் திறப்பு விழாவையும் முடித்து விட்டனர். 
 
ஆனால், அதை அகற்றுமாறு போலீசார் வலியுறுத்தி வந்தனர். ஆனால், காவல் துறையின் கோரிக்கையை தீபா பேரவையினர் ஏற்க மறுத்ததால், போலீசாரே அந்த சிலைகளை அகற்றி கொண்டு சென்றனர். அந்த சிலைகள் தற்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்