சமீபத்தில் விஜய் டீவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் திருமணத்தின் மீது இளம்பெண்களின் ஆசை என்கிற பார்வையில் ஒரு விவாதம் நடந்தது. அதில், சென்னையில் தங்கி பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்து வரும் நிவேதா என்ற பெண், திருமண நாளன்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும் மணமகன், ஹெலிகாப்டரில் வந்து இறங்க வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து இதுபற்றி கருத்து தெரிவித்த நிவேதா, நான் கூறியது பற்றி மீம்ஸ்களை உருவாக்கியவர்கள் எவரும் அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஹெலிகாப்டரில் வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறினேன். பொதுவாக, அந்த ஆசை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும். ஆனால், ஹெலிகாப்டரில் வரும் மணமகனைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியதாக தவறாக சித்தரித்து, மீம்ஸ்களை உலவ விட்டுள்ளனர். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். உறக்கமே வரவில்லை. கல்லூரிக்கும் இன்று விடுமுறை எடுத்து விட்டேன். உண்மையில் நான் வரதட்சணைக்கு எதிரானவள். தவறாக புரிந்து கொண்டு என்னை கிண்டலடிக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.