இந்நிலையில் நள்ளிரவு அந்த பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி கண்ணதாசன் என்பவர் வீட்டையும், அவரது எதிர்வீடான ஓய்வுபெற்ற மீன்வளத்துறை அதிகாரி சுந்தரேசன் என்பவர் வீட்டையும், முகமூடி அணிந்த 3 நபர்கள் நீளமான தடிகளுடன் புகுந்து வீட்டின் முன் கதவின் பூட்டை உடைக்க முயற்ச்சி செய்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாகவே இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தங்கள் வீடுகளை சுற்றியும் காலி நிலங்கள் உள்ளதால் அங்கு இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் அதிகமாக உள்ளதால், அவர்களில் ஒரு குழுவினர் தான் இது போன்று செய்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.