இந்த திரு விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் இரவு 9:30 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துடன், அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெண்கள் கையில் அகல் விளக்கு ஏந்திய படி அம்மனை வரவேற்றனர்.
மேலும் பக்தர்கள் சிவன்,பார்வதி வேடம்,சாமி வேடங்கள் அணிந்து நடனமாடி பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்கினார்.