கணவன் சொத்துகளில் மனைவிக்கு சமபங்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

புதன், 26 ஜூலை 2023 (14:16 IST)
திருமணத்திற்கு பின்னர் கணவன் சேர்க்கும் சொத்துக்களில் மனைவிக்கும் சமபங்கு உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை பின்பற்றி சட்டம் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
 மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்ற வாதங்களை நீதிமன்றம் முன் வைத்தது , மனைவிக்கும் கணவன் சொத்தில் சமமாக பங்கு உண்டு என்பதை தீர்ப்பு சுட்டிக்காட்டியதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் திருமணத்திற்கு பின் சேரும் மொத்த சொத்துகளில் மனைவிக்கு சம பங்கை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்