கணவன் ஒருவர்; காதலர் இருவர் - கள்ளத்தொடர்பால் ஒருவர் வெட்டிக் கொலை

திங்கள், 11 ஜூலை 2016 (15:08 IST)
நெல்லையில் கணவன் இருக்க, மேலும் இருவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த புளிச்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பெண் வேணி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. வேணிக்கு முத்துமலையாபுரத்தை சேர்ந்த அசோகன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
 
அதே சமயம், அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் வேணி பழக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அசோகன் வேணியின் வீ்ட்டுக்கு வந்துள்ளார், கதவை தட்டிபார்த்துள்ளார், ஆனால் வேணி திறக்கவில்லை.
 
திருமணம் ஆன வேணிக்கும், முத்துமலையாபுரத்தை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. பின்னர் இதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் வேணி பழக ஆரம்பித்துள்ளார்.
 
இந்நிலையில் வேணியின் காண்பதற்கு வேணியின் இல்லத்திற்கு அசோகன் வந்து வந்து, வீட்டுக் கதவினை தட்டிபார்த்துள்ளார். அப்போது வேணி கதவினை திறக்காமல் இருந்துள்ளார். மேலும், நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் திறந்துள்ளார்.
 
அப்போது வீட்டில் ஆனந்தை பார்த்ததும் கடுப்பான அசோகன், ஆனந்த் மீது சராமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளார். மேலும், அங்கிருந்து தப்ப முயன்ற ஆனந்தை அரிவாளாள் வெட்டியுள்ளார். இதில், ஆனந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
 
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், ஆனந்த் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வேணி குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், ஒரே சமயத்தில் இருவருடன் தகாத உறவை வைத்திருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து அசோகனையும், வேணியையும் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்