மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்: பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?

வெள்ளி, 2 ஜூன் 2023 (11:13 IST)
ப்ளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த தேர்வில் விடைத்தாள் மதிப்பீட்டில் பல குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்ததா என விசாரிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் கொடுக்கின்றன. 
 
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக 5 முதல் 7 மதிப்பெண் அதிகமாக வழங்கி இருப்பதாகவும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதா என்பதை அரசு தேர்வு துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 
பொது தேர்வில் தேர்ச்சியை விகிதத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக மதிப்பெண் அதிகமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்