ஆனால் இதனை நிராகரித்த நீதிபதி டி.ராஜா, 'காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? என்ற கேள்வியை தமிழக அரசு முன் வைத்தார். மேலும் போராட்டங்களை ஒழுங்கப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.