புயல் நீரில் மூழ்கியது மெரினா கடற்கரை..!

புதன், 25 நவம்பர் 2020 (10:58 IST)
கடல் நீரும், மழை நீரும் ஒருசேர மெரினாவை சூழ்ந்தது!
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
அதாவது, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மணிக்கு 130 - 140 கிமி வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமி வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள் அளவை நோக்கி ரொம்பி வருகிறது. அதே போல் மெரீனா கடற்கரையை கடல் நீரும், மழை நீரும் ஒன்று சேர  சூழ்ந்தது. புயல் நீரால் மெரினா கடற்கரை மூழ்கியுள்ளதை கண்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்