வைரமுத்துவை கட்டி வைத்து அடிப்பீர்களா?: மனுஷ்யபுத்திரன் ஆவேசம்!

புதன், 27 ஜூலை 2016 (08:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளே 100 கோடி வசூலித்ததாக கூறப்படும் இந்த படம், வசூலில் பல சாதனைகளை புரிந்துள்ளது.


 
 
படம் வசூல் சாதனை புரிந்தாலும், படம் குறித்த விமர்சனங்கள் கலவையாகவே வருகிறது.  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி படம் என குறிப்பிட்டார். இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகி பரவி, பரவலாக பேசப்பட்டது.
 
இதனையடுத்து கபாலி படத்தின் தயாரிப்பாளர் வைரமுத்துவின் கருத்துக்கு பதிலடி கூறினார். கபாலி திரைப்படத்தில் வைரமுத்துவுக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காததால் இப்படி பேசுகிறார். மேலும் தம்மிடம் இருந்து 4000 கபாலி டிக்கெட்டுகளை வைரமுத்து இலவசமாக வாங்கி சென்றார் எனவும் கூறினார்.
 
இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக திமுக பேச்சாளரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், கடவுளையே எதிர்த்த ஒரு மாநிலத்தில் கபாலியை எதிர்க்க முடியாது போலிருக்கிறது.
 
'கபாலியின் தோல்வி' என்று வைரமுத்து ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக அவரை இவ்வளவு தூரம் கட்டி வைத்து அடிப்பீர்களா? உடனே அவர் சாதிவெறியன் ஆகிவிடுவாரா? தினமணி வெளிப்படுத்தியது மிகப்பச்சையான சாதிய அரசியல். அதை எதிர்ப்பதை புரிந்துகொள்ள் முடிகிறது. ஆனால் வைரமுத்து அத்தகைய தொனியிலா பேசினார்?
 
விஸ்வரூபம் என்ற படம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் மூலம் தமிழர்ககள் அனைவரும் அந்தப் படத்தை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது கபாலி இவ்வளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் அதே போன்ற காரணம் இருக்கலாம்.
 
வைரமுத்து மீதான இந்தத்தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை. கபாலி ஒரு மசாலா படம். அதை மதம் ஆக்காதீர்கள் என மனுஷ்யபுத்திரன் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்