இதில், ஏப்ரல் 1 (நாளை) முதல் HUID எனும் ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை எனவும், தங்க நகைகளை வாங்கும் முன் HUID குறியீடு உள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய தர நிர்ணய அமைவனம், கோயம்புத்தூர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி மற்றும் விஞ்ஞானி கோபிநாத் பேசுகையில்,
ஹால்மார்க் மையங்கள் BIS வழங்கிய நடைமுறைகளை பின்பற்றி நகைகளில் தூய்மை தன்மையை பரிசோதித்து, உரிய தூய்மை தன்மை உறுதி செய்த பின்னரே நகைகளில் லேசர் மூலம் BIS முத்திரை, தங்கத்தின் தூய்மை மற்றும் HUID ஆகிய மூன்று கட்டாய குறியீடுகள் குறிக்கப்படுகிறது. நுகர்வோர் மற்றும் நகை வாங்குபவர்கள் BIS Care App என்னும் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்க நகைகளின் உண்மை தன்மையை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இந்த நடைமுறைகளை பின்பற்றாத தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.