சென்னையில் மனைவியுடன் செல்ஃபி எடுத்த அண்ணனை கொலை செய்த தம்பி

வியாழன், 6 ஜூலை 2017 (16:44 IST)
சென்னையில் தனது மனைவியுடன் செல்ஃபி எடுத்த அண்ணனை தம்பி கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் புலேந்திரன் என்பவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இவரது அண்ணன் ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். சிதம்பரத்தில் பணிபுரியும் இவர்களது கடைசி தம்பி வெங்கட்ரமணா 20 நாள் விடுப்பில் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். 
 
நேற்று இரவு வெங்கட்ரமணா அழைத்ததன் பேரில் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ராஜேந்திரன் வெங்கட்ரமணாவின் மனைவியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை அவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கட்ரமணா தனது அண்ணன் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றி போக வெங்கட்ரமணா கத்தியால் ராஜேந்திரனை கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வெங்கட்ரமணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்