தம்பி மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய வாலிபர் - அதிர்ச்சி செய்தி

புதன், 9 மே 2018 (12:12 IST)
சொத்துக்காக சொந்த சகோதரனின் மனைவியையே ஒரு வாலிபர் வெட்டிக் கொன்ற விவகாரம் திருவாரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஓன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
 
ராஜசேகர் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி எஸ்தர், தனது குழந்தையுடன் தனிமையில் வசித்து வந்தார். கடந்த 6ம் தெதி இவரின் வீட்டிற்கு உறவினர்கள் சென்ற போது எஸ்தர் அங்கு இல்லை. மாறாக ராஜசேகரும், எஸ்தரின் குழந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் இதுபற்றி ராஜசேகருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்த ராஜசேகர் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதன்பேரில் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். எனவே, அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், எஸ்தரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
 
திருமணத்திற்கு முன் தனது தம்பி ராஜசேகர் சிங்கப்பூரிலிருந்து பணத்தை தனக்கு அனுப்பி வந்ததாகவும், திருமணத்திற்கு பின் எஸ்தருக்கே அனுப்பி வருவதால், அது பிடிக்காமல் எஸ்தரை கொலை அவர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி மூட்டைக் கட்டி புதரில் வீசி விட்டதாகவும் தெரிவித்தார்.
 
அதன்பின், போலீசார் எஸ்தரின் உடலை கைப்பற்றினர். நெல்சனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் எஸ்தரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்