அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து மகளை சீரழித்த அவலம்!

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (10:10 IST)
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 42 வயதான நபர் ஒருவர் அவரது மகளை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சித்தப்பாவை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.


 
 
கடந்த நவம்பர் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து வாழப்படியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காணாமல் போனார்கள். காணாமல் போன மாணவிகள் குறித்து அவர்களது பெற்றோர்கள் தனித்தனியாக புகார் அளித்தனர்.
 
இந்நிலையில் அந்த மூன்று மாணவிகளில் ஒரு மாணவியின் உறவினர் வீட்டில் ஊட்டியில் அந்த மூன்று மாணவிகளும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஊட்டிக்கு சென்று மீட்டனர் காவல்துறையினர். பின்னர் அவர்களை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
 
மாணவிகள் மூவருக்கும் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவி தான் தனது தந்தை மற்றும் சித்தப்பாவால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையை கூறியுள்ளார். அவர்களின் பாலியல் தொல்லை தாங்காமல் தான் மற்ற மாணவிகளுடன் ஊட்டிக்கு வந்ததாக அந்த மாணவி கூறினார்.
 
இதனையடுத்து 42 வயதான கட்டிட வேலை செய்யும் மாணவியின் தந்தையை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது. தலைமைறைவாக உள்ள சித்தப்பாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்