நல்ல மார்க் எடுத்தும் கல்லூரியில் சேராத மாணவி! – உடனடி நடவடிக்கை எடுத்த எம்.பி சு.வெங்கடேசன்!

திங்கள், 19 ஜூன் 2023 (13:52 IST)
மதுரையில் நல்ல மார்க் எடுத்தும் கல்லூரியில் சேராத மாணவி குறித்த செய்திகள் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட மாணவி கல்லூரியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரி சேர்க்கை பணிகள் தொடங்கின. சமீபத்தில் அரசு கல்லூரிக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில் கல்லூரிகள் 22ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் நந்தினி என்பவர் 12ம் வகுப்பு தேர்வுகளில் 600 மதிப்பெண்களுக்கு 546 மதிப்பெண்கள் பெற்றிருந்துள்ளார். ஆனால் அரசு கல்லூரி படிப்புகளில் விண்ணப்பிப்பது குறித்து அவருக்கு தெரியாத நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிந்த பின்னர்தான் அவருக்கு தெரிய வந்துள்ளது.

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமலும், தனியார் கல்லூரிகளில் சேர பண வசதி இல்லாததாலும் அவர் தமிழ்நாடு அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாணவி நந்தினி அரசு கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். “மதுரை மாணவி நந்தினி அருள்மிகு மீனாட்சி அரசுக் கல்லூரியில் BCom பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தலையிட்ட, கவனப்படுத்திய, உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி” என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்