இது லைப்ரரியா.. ஷாப்பிங் மாலா? – அசர வைக்கும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

வியாழன், 1 ஜூன் 2023 (17:13 IST)
மதுரையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.



கடந்த 2021ம் ஆண்டில் திமுக ஆட்சியமைத்தபோது மதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடி செலவில் நூலகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.



2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கட்டிட வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கட்டிட வேலைகள் முழுவதுமாக முடிந்துள்ளது. 2.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்ட கட்டிடமாக இது உருவாகியுள்ளது.



நாளை மறுநாள் (ஜூன் 3) இந்த நூலகம் திறக்கப்பட உள்ள நிலையில் தற்போது புத்தகங்கள் அடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நூலகத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ஷாப்பிங் மால் அளவு பிரம்மாண்டமாக உள்ள இந்த நூலகம் பலரையும் ஈர்த்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்