மதுரை சித்திரை திருவிழா.. இன்று கள்ளழகர் எதிர்சேவை..!

வியாழன், 4 மே 2023 (07:52 IST)
மதுரையில் கடந்த சில நாட்களாக சித்திரை திருவிழா நடந்து வருகிறது என்பதும் நேற்று முன் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் நேற்று தேரோட்டம் நடந்தது என்பதையும் பார்த்தோம்.
 
 இந்த நிலையில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று புறப்பட்டு உள்ளார் என்பதும் இன்று எதிர்சேவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர்  புறப்பட்டு உள்ளார் 
 
மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை அதிகாலையில் 5.45 மணிக்கு கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதும் இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்