டி23 புலியை சுட்டுக் கொல்வதா?

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (15:32 IST)
நீலகிரியில் உள்ள புலியை வேட்டையாடி பிடிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது.
 
நீலகிரி மசினக்குடி பகுதியில் சுற்றி வரும் டி23 புலி நான்கு பேரை கொன்றுள்ள நிலையில் அதை பிடிக்கும் முயற்சியில் கடந்த 11 நாட்களாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புலியின் வழித்தடத்தை கண்டறிந்து சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். 
 
ஆனால் வனத்துறையினருக்கு சிக்காமல் மீண்டும் டி23 தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டி23 புலி எந்த பக்கம் நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே புலியை வேட்டையாடி பிடிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள், சுற்றித்திரியும் அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம். எனவே அதை உடனடியாக  கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
 
மேலும், புலியின் நடவடிக்கை கண்காணித்து அதை பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்