1. கருப்பு பீன்ஸ்: ஒரு கப் கருப்பு பீன்ஸில் 15 கிராம் நார்ச்சத்து உள்ளது. கருப்பு பீன்ஸில் உள்ள ஆந்தோசியாசின்ஸ் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிக துரிதமாக செயல்படுவதோடு, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.
2. ராஸ்பெர்ரி: 1 கப் ராஸ்பெர்ரியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்துடன் சேர்த்து ஆன்டிஆக்சிடன்ட், வைட்டமின் சி நிறைந்த ராஸ்பெர்ரி அளவில் சிறியதாக இருந்தாலும், ஆற்றலில் மிகப் பெரியது. இவற்றை யோகர்ட், சாலட் அல்லது அப்படியே கூடி சாப்பிடலாம்.
4. ப்ளாக்பெர்ரி: 1 கப் ப்ளாக்பெர்ரியில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதிகமான நார்ச்சத்து கொண்டுள்ள ப்ளாக்பர்ரியில், ஆன்டிஆக்சிடன்ட், ஆன்தோசியானின் உள்ளது. இது உடலில் அழற்சி தன்மையை குறைத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
5. பட்டாணி: 1/4 கப் பட்டாணியில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது. மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் உடைத்த பட்டாணியில் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகமாகவே உள்ளது. குறைந்த கொழுப்புச்சத்து உள்ள பட்டாணியில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.