அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கைவிடப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை மெளனம்..!

செவ்வாய், 30 மே 2023 (10:59 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அது குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதால் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை அரசு கைவிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
தொடக்க கல்வித்துறையின் வழிகாட்டி நெறிமுறைகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை மட்டுமே உள்ளது என்றும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த எந்த விதமான தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை தீவிர படுத்தவே ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வாக்குகளுக்கு மாணவர் சேர்க்க இதுவரை வெளியாகாததால் பெற்றோர்கள் கடும் அதிர்வுதியில் உள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்