மத்திய அரசே வேர்களில் வெந்நீர் ஊற்றாதே - எல்ஐசி பங்கு விற்பனை குறித்து டிவிட்!

புதன், 19 ஜனவரி 2022 (09:33 IST)
மத்திய அரசே வேர்களில் வெந்நீர் ஊற்றாதே, எல்ஐசி பங்கு விற்பனை முடிவைக் கைவிடு என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

 
1956 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பொருளாதார மாற்றங்களில் நடைபெற்ற முக்கியமான ஒன்றாக இது திகழ்கிறது. 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்ட அதே ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி எல்ஐசி உருவானது. 
 
எல்ஐசி 60 சதவீத பங்கை தன் கையில் வைத்து உள்ளது என்பதும் மீதமுள்ள பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்து 66 லட்சம் ரூபாய் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 20 சதவீத பங்குகளை வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 
 
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 19 - 1956 ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள். தேசம் பொருளாதார வெயிலில் வியர்த்து திணறும் போது அடர்ந்த நிழலைத் தந்து ஆசுவாசப்படுத்துகிற எல்ஐசி என்ற ஆலமரத்தின் விதை துளிர்விட்ட நாள். மத்திய அரசே வேர்களில் வெந்நீர் ஊற்றாதே. எல்ஐசி பங்கு விற்பனை முடிவைக் கைவிடு என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்