விடிய விடிய ஏ.டி.எம். முன் காத்திருக்கும் பொதுமக்கள்

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (12:36 IST)
பணத்தட்டுபாடு காரணமாக பொதுமக்கள் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களில் விடிய விடிய காத்து கிடக்கின்றனர். இரவு 11 மணிக்கு மேலும், அதிகாலை 5 மணிக்கு முன்பும் மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அன்று முதல் இன்றுவரை பொதுமக்கள் பணத்தட்டுபாடு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
 
இடையில் குறுகிய நாட்கள் தினமும் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பி வந்த வங்கிகள் தற்போது ஒருவாரம் காலமாக எ.டி.எம். மையகங்களில் பணம் இல்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் ஒரு சில ஏ.டி.எம்.களில் அதிகாலையிலும், இரவு 10 மணிக்கு மேலும் பணம் நிரப்பப்படுகிறது. பணம் நிரப்பப்பட்ட செய்தி அறிந்தவுடன் பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து செல்கின்றனர். நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணம் கிடைத்தால் போதும் என்று ஏ.டி.எம். மையத்தில் காத்து கிடக்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்