திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறையினர் ஆய்வு நடத்தியதில், கடையின் பின்புறமுள்ள புனித ஜோசப் பள்ளிக்கும் கடைக்கும் இடையே ஒரே சுவர் என்பதால் பள்ளியின் வழியே பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
கடையில் துளையிட்டு நுழைந்து திருடிய நகைகளை பைகளில் நிரப்பிக்கொண்டு, அந்த பைகளை கயிறு மூலம் கட்டி வெளியே இழுத்து கொண்டுவந்துள்ளனர். யாரேனும் இருக்கிறார்களா இல்லையா என்பதை வாய் திறந்து பேசாமல் கயிறு மூலமாகவே சிக்னல் கொடுத்துள்ளனர்.