தடுப்பூசியே ஸ்டாக் இல்லாம தடுப்பூசி திருவிழாவா?

புதன், 14 ஏப்ரல் 2021 (09:31 IST)
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

 
கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருக்கும் ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. வழக்கமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
 
ஆனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட வருபவர்களை திருப்பி அனுப்பி வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்