கிராம வாழ்க்கை அனுபவத்தைக் கொடுக்கும் ‘லா வில்லா’! - நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்!

J.Durai

ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:16 IST)
வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இளைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற இயற்கை வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும் ஒரு அருமையான வில்லா சென்னை அருகே திறக்கப்பட்டுள்ளது.


 
இயற்கை அழகின் சரியான கலவையாகவும், கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்தை கொடுக்கும் ஒரு அமைதியான தளமாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ள ‘லா வில்லா’ மகாபலிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள கடம்பாடி ஊரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது

வழக்கமான ரிசார்ட் மற்றும் வில்லாக்கள் போல் இல்லாமல், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் மொத்தம் மூன்று காட்டேஜ்கள் உள்ளன.

 ’தினை’, ‘வரகு’ மற்றும் ‘சாமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த காட்டேஜ்கள் பழமையான கிராமத்து வீடுகள் பாணியில் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, தற்போதைய அதிநவீன தொழில்நுட்ப வசதியோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நீச்சல் குளங்களை தவிர்த்துவிட்டு, கிராமத்து அனுபவத்தைக் கொடுக்கும் பம்பு செட் குளியல் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எந்தவித பாதிப்பும் இன்றி குளித்து மகிழும்படியான இத்தகைய பம்பு செட் தொட்டிகள் நிச்சயம் மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே வழங்கும் ‘லா வில்லா’ அதை கிராமத்து பாணியில் சமைத்து, அதே கிராமத்து பாணியில் வழங்குகிறது.

அவர்களது பண்ணையில் இயற்கையாக வளறும் காய்கறிகள் கொண்டு சைவ உணவுகளை தயாரிப்பவர்கள் அசைவ உணவுக்காக தங்கள் பண்ணையிலேயே நாட்டுக் கோழி மற்றும் ஆடுகளை வளர்க்கிறார்கள்.

மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளையும் மண் சட்டியில் அமைத்து, மண் மனம் மாறாமல் வழங்குகிறார்கள். மேலும், சிறுதானிய உணவு வகைகள், களி, வரகு அரிசி பணியாரம், மாப்பிள்ளை சம்பா சோறு என நம் பண்டைய ஆரோக்கியமான உணவுகளையும் வழங்குகிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாமரங்கள், தென்னை மரங்கள் என வில்லா முழுவதும் ஏகப்பட்ட மரங்கள் நிறைந்திருப்பதால், எப்போதுமே குளிர்ச்சியான உணர்வைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்கான சரியான இடமாகவும் ’லா வில்லா’ உள்ளது.

முழுக்க முழுக்க ஒரு இயற்கை வளம் நிறைந்த கிராமத்துக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும் ‘லா வில்லா’ குடும்பத்தோடு விடுமுறை நாட்களை கழிப்பதற்கு சரியான இடமாக மட்டும் இன்றி, அமைதியான சூழலோடு, ஆரோக்கியமான வாழ்விற்கான சரியான இடமாக உள்ளது.

மாட்டு வண்டி சவாரி, விசாயம் செய்யும் முறை, காய்கறி பண்ணைகள் என்று எதிர்காலத்தில் இன்னும் பல அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ‘லா வில்லா’ கிராமத்து வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு அத்தகைய வாழ்க்கையை மீட்டுக்கொடுக்கும் விதமாகவும், கிராமத்து வாழ்க்கையின் மகிமையை அனுபவிக்காதவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் அமைந்திருக்கும் இயற்கையின் சொர்க்கம் என்றால் அது மிகையல்ல.

பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான லலிதா குமாரியின் தனது கனவு திட்டமாக ஆரம்பித்துள்ள ‘லா வில்லா’-வின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டுபவரும், விவசாயிகளை அங்கீகரித்து கெளரவப்படுத்தி வருபவருமான நடிகர் கார்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ‘லா வில்லா’ வை திறந்து வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்