குற்றாலத்தில் சீசன் களை கட்டியது - உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

வெள்ளி, 19 ஜூன் 2015 (01:00 IST)
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்சி அடைந்துள்ளனர்
 

 
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குற்றால அருவிகள் கண்களுக்கும், மனதிற்கும், உடலுக்கும் ஒருசேர விருந்து படைக்கின்றது. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது. 
 
மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும். 
குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. 
 
மேலும், இந்தத் தண்ணீரில் குளிப்பது உடலுக்குப் புத்துணர்வை தருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். 
 
குற்றாலத்தில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த மூன்று மாதங்களிலும் சாரல் மழை விட்டுவிட்டுப் பெய்து பூமிக்கும், அங்கு வருபவர்களுக்கும் நல்ல குளிர்சியையும், மகிழ்சியையும் கொடுக்கும். அவ்வப்போது, இதமான வெயிலும் அடிக்கும். 
 
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேன் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. 
 
சீசன் காலத்தில், சாரல் மழை விட்டுவிட்டு பெய்த வண்ணம் இருக்கும். இப்போது அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டு, சீசன் தொடங்கியுள்ளது. இதனால், சுற்றுலாப் பணிகள் பெரும் மகிழ்ச்சிடயடைந்தள்ளனர். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்