தலைகீழாக கொடியேற்றிய குஷ்பூ: பாஜக விழாவில் சலசலப்பு!

புதன், 6 ஏப்ரல் 2022 (11:23 IST)
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கொடியை தலைகீழாக ஏற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 
ஆரம்பத்தில் திமுகவில் இருந்தாலும், பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்து தற்போது பாஜக கட்சியில் பொறுப்பு வகித்து வருபவர் நடிகை குஷ்பூ. இந்நிலையில் இன்று பாஜக 42வது ஆண்டு விழாவையொட்டி இன்று பாஜகவின் தொடக்க நாள் என்பதால் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. 
 
அப்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கொடியை தலைகீழாக ஏற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் காணொலி மூலம் பிரதமர் மற்றும் தேசிய பாஜக தலைவர் நட்டா பேசினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்