இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் இன்று தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பிரதமர் மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் என்றும் அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் அவர் சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.