கே.பி.பார்க் பூச்சு வேலை மோசமாக உள்ளது - ஐஐடி குழு அறிக்கையில் தகவல்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (19:47 IST)
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு வேலை மோசமாக உள்ளது என ஐஐடி குழு அறிக்கையில் தகவல். 
 
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் கடந்த 2 மாதங்களாக சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறது.
 
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பதாக செய்தி வெளியானது. அதன் ஆய்வு அறிக்கையில் ஈடுபட்ட  ஐஐடி குழு 9 பக்கம் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது . அதில்,கட்டுமான பணிக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் 70% மாதிரிகளில் சிமெண்ட்டின் அளவு தேவையை விட குறைவு எனவும் டைல்ஸ் கற்கள் சரியாக பொறுத்தப்படவில்லை என்றும் ஐஐடி குழு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்