எடப்பாடிக்கு வாக்களிக்க விரும்பவில்லை: கூவத்தூரில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ அருண் குமார்!

சனி, 18 பிப்ரவரி 2017 (08:51 IST)
கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் இன்று அங்கிருந்து வெளியேறி வாக்கெடுப்பை புறக்கணித்து எடப்பாடிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என கூறினார்.


 
 
கடந்த சில தினங்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதிமுகவினர் அங்கிருந்தவாறே அவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள் என கூறி வந்தனர்.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நேற்று முன்தினம் பதவியேற்றது. இவர்கள் இன்று தங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் அனைத்து எம்எல்ஏக்களும் கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் வாக்களிக்க விருப்பமில்லை என கூறி சொந்த ஊருக்கு திரும்புகிறார்.
 
மக்களின் விருப்பப்படி எடப்படிக்கு வாக்களிக்கு விரும்பவில்லை. ஒரு குடும்பத்தின் ஆட்சி அமைய தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் கூறினார். இது சசிகலா அணியினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் அவர் ஓபிஎஸ் அணிக்கும் ஆதரவு வழங்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்