கொடநாடு கொலை வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சனி, 19 மார்ச் 2022 (17:52 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போன தாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்  காவல் துறையின் மேல் விசாரணை நடந்து வருவதால் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்