பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு காலி இடங்கள் எத்தனை தெரியுமா?

வெள்ளி, 22 ஜூலை 2016 (23:57 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 25 நாட்களாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 21) நிறைவு பெற்ற கலந்தாய்வின் முடிவில் 1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
 

 

மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அழைக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து, 204 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 414 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து விட்டனர்.
 
கலந்தாய்விற்கு வராதவர்களின் விழுக்காடு 34.42 ஆகும். 2015-16 கல்வியாண்டில் கலந்தாய்வு நிறைவு பெறும் போது, 98 ஆயிரம் பேர் சேர்க்கை பெற்றிருந்தனர். 94 ஆயிரத்து 772 இடங்கள் காலியாக இருந்தன.
 
ஆனால், இந்தாண்டில் 82 ஆயிரத்து 424 பேர் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
 
அதாவது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 966 இடங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஆயிரத்து 66 இடங்களும், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 இடங்களும் காலியாக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்