அதிமுக என் மீது வீண்பழி போடுகிறது: கே.என்.நேரு

ஞாயிறு, 28 மார்ச் 2021 (20:32 IST)
அதிமுக தன் மீது வீண்பழி போடுவதாகவும் தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் வெற்றி பெற அதிமுக முயற்சிப்பதாகவும் முன்னாள் திமுக அமைச்சர் கேஎன் நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்
 
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு காவலர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக வேட்பாளர் பத்மநாபன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்
 
இந்த நிலையில் பீமநகர் துருப்பு பள்ளிவாசலில் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்த பின் கேஎன் நேரு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக கூறினார். தன்னை எதிர்த்து ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது என்பதால் என் மீது பழி சுமத்தி வெற்றி பெறலாம் என அதிமுக வேட்பாளர் நினைப்பதாகவும் அவர் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்