பாடமெடுப்பவர்களுக்கு பாடம்: கஸ்தூரியின் டுவீட்டால் கொதித்துப்போன ஆசிரியர்கள்

வியாழன், 31 ஜனவரி 2019 (13:07 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த வாபஸ்சை கஸ்தூரி டிவிட்டரில் விமர்சித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டும் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை.
 
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடைசியாக எச்சரிக்கை விடுத்தது. இதனால் அடிபணிந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று தங்களது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இந்த போராட்டம் தொடங்கியபோதே நடிகை கஸ்தூரி, ஒண்ணாம்கிளாஸ்  வாத்தியாருக்கு Tidel  Park இல்  வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஆசியர்களின் இந்த வேலை நிறுத்த வாபஸ் சம்மந்தமாக கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் 
 
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்  வாபஸ். 
மிரட்டலுக்கு பணியாத அரசு என்று EPS அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. இது மக்களின்  வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு  பாடம். 
 
அது என்ன தற்காலிக வாபஸ்? 
"சம்பளம் கட்  ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு... இப்போ வேணாம். விடுமுறை நாட்களிலே தேர்தல் வரும், அப்போ தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது நம்ம யாருன்னு காட்டுவோம் பாரு" என்று கறுவினார்  நண்பர். இவரின் கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்