சென்னையை தொடர்ந்து கரூரிலும் பள்ளி மாணவியை கொல்ல முயற்சி

புதன், 29 ஜூன் 2016 (16:25 IST)
கரூர் அருகே பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அந்த மாணவியின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். 


 

 
கரூர் அருகேயுள்ள இனாம் கரூர் (என்கின்ற) வெங்கமேடு பகுதியை சார்ந்தவர் அசோக்குமார். கூலித் தொழிலாளியான இவருக்கு அமுதா(15) என்ற மகள் உள்ளார். இவர் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 
 
இந்நிலையில் இன்று வழக்கம் போல் அமுதா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து மாணவியை கிண்டல் செய்து பின்பு மூன்று பேரும் சேர்ந்து வயிற்றிலும், கழுத்திலும் தாக்கியுள்ளனர். 
 
இதில் நிலைதடுமாறிய மயக்கம் அடைந்தார் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அந்த மூன்று இளைஞர்களையும் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர். மயக்கமடைந்த மாணவியை கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
 
இச்சம்பவம் குறித்து வெங்கமேடு காவல்துரையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை தாக்கிய நபர்களை தேடிவருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறும் போது இது போன்ற சம்பவம் அப்பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் அதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனவும் தனக்கு நடந்ததை போல் இனி யாருக்கும் நடைபெற கூடாது என அம்மாணவி வேதனையுடன் கூறினார். 
 
தற்போது தமிழக அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு குறித்து கூட்டம் நடத்தப்பட்டும், கரூர் மாவட்ட போலீஸார் தங்களது வேகத்தை துரிதப்படுத்தாமல், மெத்தனப்போக்கினில் ஈடுப்பட்டு வருவது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 

வெப்துனியாவைப் படிக்கவும்