கரூர் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டாரா சபாநாயகர் தம்பித்துரை?

திங்கள், 4 ஜூலை 2016 (18:55 IST)
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு கட்சி சார்பிலும், முஸ்லீம்களின் புனித நோன்பான ரமலான் நோன்பு நிகழ்ச்சி அனைத்து கட்சி சார்பிலும் நடைபெற்று வருகின்றது. 


 

 
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மசுதியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் விழா கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு இந்நிகழ்ச்சி பிடிக்க வில்லை என்றும், எங்கே என்னை எம்.பியாக்கிய, முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி இல்லாததையடுத்து மிகுந்த கவலையடைந்ததோடு, அந்த அல்லா விடமே மன்னிப்பு கேட்டதாகவும், பேஸ்புக், வாட்ஸ் அப்புகளில் தீயாக பரவுகின்றது.
 
அப்படி என்னதான் தம்பித்துரைக்கும் செந்தில் பாலாஜிக்கும் பிரச்சினை என்று பார்த்தால் தெரியும், அ.தி.மு.க வினருக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் தோண்ட ஆரம்பித்துள்ளது. உதாரணத்திற்கு கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் உள்ளதாம்,
 
எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசியான தம்பிதுரை, கடந்த இரண்டு (2011 லிருந்து 2013 வரை) வருடங்களாக அ.தி.மு.க. தலைமை மீது வருத்தத்தில் உள்ளார் என்றும், தொடர்ச்சியான சில விரும்பத்தகாத சம்பவங்கள் 30 வருடத்துக்கு மேல் அரசியலில் இருக்கும் அவரை மனத்துயரத்தில் தம்பித்துரையை ஆழ்த்தி விட்டதாக அவர் தரப்பினரே கூறியுள்ளனர். 
 
ஏனென்றால் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி யாரேனும், எதேனும் கூறினால் விட்டு விடுவார். ஆனால் எம்.ஜி.ஆரை பற்றி பேசினால் போதும் அப்படியே கடுமையாக பேசுவதோடு, கடுமையாக திட்டுவார். இந்த நிலையில் இவரது செயல் ஒவ்வொன்றும் ஊடகங்களில் வெளி வந்ததை முன்னாள் அமைச்சரும், தற்போது தி.மு.க வில் ஐக்கியமான தி.மு.க மாநில விவசாய அணி செயலாளருமான சின்னசாமியே பலமுறை ஜெயலலிதாவிடம் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் 1984-ம் ஆண்டே துணை நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரைக்கு பல கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு. டில்லியில் மிக எளிதாக யாராலும் அணுகப்பட கூடியவர் அவர் என்பதால் இன்றும் அ.தி.மு.க இவரை வைத்துள்ளதே தவிர, அம்மாவிற்காக நான்,. அம்மாவினால் நான் என்று எங்கேயும் கூறமாட்டார். 
 
இப்படி இருக்க, சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற போது, தம்பித்துரையின் பெயரை விட்டு விட்டதாகவும், அதில் ஐவர் அணி, நால்வர் அணியினர் இருந்ததாகவும், தன்னால் உருவான செந்தில் பாலாஜியின் பெயர் கூட இருந்ததாகவும் தம்பித்துரை தரப்பு கூறப்படுகின்றது. 
 
இந்நிலையில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த செந்தில் பாலாஜிக்கு கருணாநிதியின் ராஜ தந்திரத்தாலும், கருணாநிதியின் கள்ள அரசியலை வைத்து கொண்டு அந்த பழியை செந்தில் பாலாஜி மேல் போட்டு விட்டு அரசியல் தர்பார் நடத்தியவர் தம்பித்துரை, 
 
இப்படி இருக்க, முற்றிலும் செந்தில் பாலாஜி அ.தி.மு.க வில் இருந்து விரட்டியடிப்போம்,. அதன் மூலம் கரூர் மாவட்ட அ.தி.மு.க வை வீழ்த்துவதோடு, கருணாநிதியிடம் ஒரு பேரம் பேசலாம் என்றும்  இன்று வரை அரசியலை வியாபாரமாக்கி வந்தவர் தம்பித்துரை.
 
நேற்று கரூர் ஈத்ஹா மசுதியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், அவர் கை கட்டி அல்லாவிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் செந்தில் பாலாஜிக்கு தான் செய்த துரோகத்திற்கு அல்லாஹ் விடம் மன்னிப்பு கேட்டது போல், அ.தி.மு.கவினர் மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர். 
 
மேலும் செந்தில் பாலாஜியை, அ.தி.மு.க நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் தம்பித்துரையின் ராஜதந்திரத்தினால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், அழைக்காமல் அரசியல் அனாதையாக்கப்பட்ட ஒரே ஒரு பெருமை கரூர் தம்பித்துரையையே சேரும், 
 
பார்ப்போம், கரூர் மாவட்ட அ.தி.மு.க வின் செயல்பாடும், அதன் வீர தீரமும், 
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 

வெப்துனியாவைப் படிக்கவும்