கருணாஸ் தொகுதி மக்களை சந்திக்க நாளை செல்கிறார்: என்ன நடக்குமோ!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:42 IST)
சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிலும் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் மீது அசிங்கமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.


 
 
முக்குலத்தோர் புலிப்படை சார்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ். இவர் அதிமுக இரண்டாக பிளவுபட்டதும் சசிகலா அணிக்கு ஆதரவு வழங்கினார்.
 
கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் இருந்தபோது கருணாஸ் குத்துப்பாட்டு போட்டு ஆட்டம் போட்டதாகவும், விபச்சார அழகிகளை அழைத்து வந்ததாகவும் சகட்டுமேனிக்கு இவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் கருணாஸ் மீது ஏகத்துக்கும் கீழ்த்தரமாக விமர்சனம் வைத்தனர்.
 
கருணாஸ் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் பெரும்பான்மையானவை ஏ வகையை சேர்ந்தவை. இதனால் கோபமடைந்த கருணாஸ் இன்று காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் தனது ஆதங்கங்களை கொட்டினார். இந்நிலையில் தனது திருவாடனை மக்களை நாளை கருணாஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் கருணாஸ் நாளை செல்ல இருப்பதால் அங்கு என்ன நடக்குமோ என்பது தெரியவில்லை. இப்படி அறிவித்துவிட்டு செல்வதால் தேவையற்ற பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்