முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப அவருக்காக பல சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் முதல்வருக்காக சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடக்கும் இந்த சிறப்பு பூஜையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், அன்வர் ராஜா எம்பி, மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்ட அதிமுக மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையின்போது 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.