அவரது பிறந்த நாளையொட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கருணாநிதி இன்று காலை 7 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.