இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்பு ஒத்துழைக்கவில்லை என்றும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பை பொறுத்தே கூற முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதால் தமிழகமெங்கும் பரபரப்பு நிலவியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன், மருத்துவமனை அறிக்கை மனவருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ அறிக்கை முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பதே சவாலாக இருப்பதாகச் சொல்கிறது . பற்பல சவால்களைக் எதிர்கொண்டவர் கருணாநிதி. அதேபோல் இந்த மருத்துவ சவால்களையும் எதிர்கொண்டு அவர் மீண்டு வருவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.