இரண்டு நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் - துரைமுருகன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (09:18 IST)
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை  இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
 
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அதித், சூர்யா, விஜய் ஆண்டனி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆபத்தான காலகட்டத்தை கடந்து தற்போது கலைஞரின் உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையிலிருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்