கருணாநிதி உடல் நலம் விசாரிக்க இன்று சென்னை வரும் ஆந்திர முதல்வர்

சனி, 4 ஆகஸ்ட் 2018 (10:23 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை  இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
 
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அதித், சூர்யா, விஜய் ஆண்டனி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 
மேலும் இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருக்கிறார்.
 
இந்நிலையில் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்