கருணாநிதி வீடு திரும்பினார்

புதன், 7 டிசம்பர் 2016 (22:00 IST)
டிசம்பர் 1ஆம் தேதி முதல் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினர்.


 

 
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவால் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவிரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
டிசம்பர் 5ஆம் தேதி திங்கட்கிழமை மாலை, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் தற்போதுதான் வீடு திரும்பினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்