அப்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபையில் திமுக எம்எல்ஏ-கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில், லேசான காய்ச்சல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. மேலும், தமிழக சட்டசபை கூட்டத்திற்கு வந்து செல்லும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டால், மட்டுமே சட்டசபைக்கு அவர் வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார்.