கருணாநிதி பிறந்த நாள் விழா சர்ச்சை

கே.என்.வடிவேல்

வெள்ளி, 3 ஜூன் 2016 (09:36 IST)
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
 

 
கருணாநிதி கடந்த 1924 ஆம் ஆண்டு ஜூன் மதம் 3ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். இளம் வயது முதல் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் அவர் 92 வயது முடிந்து இன்று 93 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
 
இதனையடுத்து, அவரது வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கேரள செண்டை மேளம் வாசிக்கப்பட்டது. இது குறித்து, தமிழர் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், செண்டை மேளம் என்பது கேரளாவில் புகழ் பெற்றது ஆகும். பழங்காலங்களில், தமிழகத்தில் கேரள செண்டை மேளம் வாசிக்கும் பழக்கம் இல்லை. அது தமிழ் மரபும் அல்ல. தவில் மட்டுமே தமிழன் இசை அடையாளம்.
 
ஆனாலும், தற்போது தமிழகத்தில் கேரள செண்டை மேளம் பொது மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவருகிறது. மூச்சுக்கு 300 தடவை தமிழ்தமிழ் என கூறும் கருணாநிதி தனது பிறந்த நாளுக்கு தமிழ் முறைப்படி இல்லாமல் கேரள முறைப்படி  இசையை நேசிப்பது புரியவில்லை என்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
 

வெப்துனியாவைப் படிக்கவும்