முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:20 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட கோரி நெல்லையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி  அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் பிரதமர் அலுவலக பரிந்துரையின் அடிப்படையில் தான் பாரத ரத்னா விருது குறித்து குடியரசு தலைவர் முடிவு செய்வார் என்று மத்திய அரசின் சார்பில் வாதம் வைக்கப்பட்டது 
 
இந்த வாதத்தை அடுத்து தனிப்பட்ட ஒரு நபருக்கு பாரத ரத்னா விருந்து வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய முடியாது என்று நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்..
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்